7 பேர் விடுதலை விவகாரம்: கோப்புகளை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார் - தமிழக அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27ஆம் தேதியே கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-04-21 11:29 GMT
சென்னை,

நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும், கவர்னர் கடந்த ஜனவரி 27ஆம் தேதியே ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார் என  சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கவர்னரின்  ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரிய நளினியின் வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்டு.

தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? என நளினி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்