புற்றுக்கு வெளியே வந்து பால் முட்டை சாப்பிடும் நாகப்பாம்பு - பக்தர்கள் பரவசம்

வேலூர் அம்மன் கோவிலில் புற்றுக்கு வெளியே வந்து பால் முட்டை சாப்பிடும் நாகப்பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

Update: 2022-04-20 04:44 GMT
வேலூர்:

வேலூர் வேப்பங்காடு பகவதி மலையில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பாம்பு புற்று ஒன்று உள்ளது. இதில் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

அப்போது புற்றின் மேல் முட்டை பால் போன்றவை வைத்து வழிபடுகின்றனர். பக்தர்கள் பலர் புற்றுக்குள் முட்டையை போடுகின்றனர். இதனை அதில் வாழும் நாகப்பாம்பு ஒன்று சாப்பிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பக்தர்கள் சிலர் புற்றின்மேல் முட்டை மற்றும் பால் வைத்தனர்.

அப்போது புற்றின் உள்ளே இருந்து நாகப்பாம்பு வெளியே வந்தது. அது முதலில் பால் குடித்தது. பின்னர் முட்டையை சாப்பிட்டது. அதற்கு பிறகு புற்றின் மேல் நின்று படம் எடுத்தபடி 30 நிமிடம் நின்றது. இதை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் பாம்பு புற்றின் அருகில் சென்று பார்த்து வழிபட்டனர். பின்னர் மீண்டும் நாக பாம்பு புற்றுக்குள் சென்று விட்டது.தொடர்ந்து பாம்புக்கு பால் முட்டை போன்றவற்றை பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்