மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை..!

தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது

Update: 2022-04-20 02:55 GMT
சென்னை,

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.  

கட்டடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை. உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி பெறலாம். அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 

இதை முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பேருராட்சி, ஊரகப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்