சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை 4 வழிச்சாலை பணி தொடர்ந்து நடந்து வருகிறது
கிழக்கு கடற்கரை 4 வழிச்சாலை பணிகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ‘கிழக்கு கடற்கரை சாலை சென்னை மற்றும் கன்னியாகுமரியை இணைக்க கூடியது. தமிழக பொருளாதார வளர்ச்சிக்கான கடவு சாலை. அந்த சாலை பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த சாலைக்கு மாநில அரசு தடையில்லா சான்று கொடுக்கவில்லை என்று சொல்லப்பட்டு வருவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்' என்றார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து கூறியதாவது:-
மாமல்லபுரம் ஒரு வழிச்சாலையாக இருந்ததை, கிழக்கு கடற்கரை சாலையாக கருணாநிதி செம்மைப்படுத்தினார். கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை 135 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. 2002-ல் சிட்கோ மற்றும் ஐ.எல்.எப். உடன் இணைந்து 50-க்கு 50 சதவீத அடிப்படையில் என்று சாலை போட முடிவு செய்யப்பட்டது. அப்போது 60 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் பணி நடைபெற்றது. ஐ.எல்.எப். என்ற தனியார் நிறுவனம் வெளியேறியதால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அமைப்பு மூலம் பணிகள் நடைபெற்றது.
சுங்கச்சாவடி வசூல்
போக்குவரத்து அதிகமாக இருந்ததால், ரூ.330 கோடி பணம் தேவைப்பட்டது. இதனை வங்கியில் கடனாக பெற்று பணிகள் தொடங்கியது. 2047 வரை வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரியை ஒட்டி 1 சுங்கச்சாவடியும், மாமல்லபுரத்தில் 1 சுங்கச்சாவடியும் அமைத்து கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த சாலையை நாங்கள் எடுத்து கொள்கிறோம் என தேசிய நெடுஞ்சாலை துறையின் கடிதம் கிடைக்கப்பெற்றது.
இதனால் இந்த சாலையை தமிழ்நாடு அரசு சார்பாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே வங்கி கடன் உள்ளது, சுங்கச்சாவடி மூலம் தான் அடைக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் யாருக்கு செல்லும், கடனை யார் அடைப்பார்கள் என்று நாங்கள் கேட்டபோது, மந்திரியிடம் கேட்டு பதில் சொல்வதாக சொல்லப்பட்டது.
பணிகள் நடக்கிறது
நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது. 707 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாமல்லபுரம் முதல் முகையூர் டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதேபோல் முகையூர் - மரக்காணத்திற்கு 792 கோடி ரூபாய் டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. மரக்காணம் - புதுச்சேரி வரை திட்டமிடல் போடப்பட்டு ஒப்பந்தம் விட தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் நாங்கள், சாலையை உங்களிடம் ஒப்படைத்து விட்டோம், சுங்கச்சாவடி வசூலை நாங்கள் செய்கிறோம் என தெரிவித்தோம். அதற்கு வாய்மொழியாக 4 வழிச்சாலையாக மாற்றும் வரை நீங்கள் வசூல் செய்யலாம் என தெரிவித்தனர். அதுவும் வாய்மொழியாக தான் தெரிவித்து இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் நம்முடைய முதல்-அமைச்சர், இந்த சாலை முக்கியமானது என்று கூறி ஒப்புதல் வழங்க சொன்னார். அதன்படி தடை இல்லா சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே இந்த சாலை பணிகள் நடக்கவில்லை என்பது தவறானது. தேசிய நெடுஞ்சாலை மூலமாக கிழக்கு கடற்கரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதான் உண்மையான நிலை.
மாநிலத்தில் உள்ள ஒரு வழிச்சாலைகளை இரு வழிச்சாலைகளாகவும், இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.