தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலம் ஆக்குவோம் சட்டசபையில் முதல்-அமைச்சர் பேச்சு
தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலம் ஆக்குவோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி தொகுதி) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார வளர்ச்சி
10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக, அதாவது ரூ.76 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். ஆனால், ரூ.21.79 லட்சம் கோடி அளவாகத்தான் பொருளாதார வளர்ச்சி உள்ளது. இன்னும் ரூ.54 லட்சம் கோடி இலக்கை எட்ட பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். ஆண்டுக்கு என்று கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் ரூ.5.4 லட்சம் கோடி மேம்படுத்த வேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நலிந்த தொழில் நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. எவ்வளவு நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது?. அதேபோல், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 75 சதவீத பணி தமிழர்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவித்தீர்கள். அது நல்ல திட்டம், அதை சட்டமாக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி காகித கப்பலா?
முதல்-அமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், அ.தி.மு.க. ஆட்சியை காகித கப்பல் என்றார். வேதனையாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதலீடுகள் எப்படி வந்தன?
இங்கே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரையாற்றுகிறபோது, நான் எனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்திலே சொன்னதாக ஒன்றை இங்கே பதிவு செய்திருக்கிறார். நான் அப்படி சொல்லவில்லை.
10 வருடங்களாக நடக்காததை, 10 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படையில்தான் சொன்னேனே தவிர, வேறல்ல.
அவர் பேசுகின்றபோது, இன்னொன்றையும் குறிப்பிட்டார். அவர்களுடைய ஆட்சி காலத்திலே, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, முதலீடுகள் எப்படி வந்தன? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்படி கூட்டினோம்? அதேபோல, எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கிறோம். அதனால் வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? என்ற விவரங்களையெல்லாம் சொன்னார்.
மிக வேகமான முன்னேற்றம்
அதேபோல, அதைத் தொடர்ந்து, இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்தவர், அவர் ஆட்சி காலத்திலே கொண்டுவந்த முதலீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டார். அதேபோல, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி எவ்வளவு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்றிருக்கிறோம்; எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன; எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதையெல்லாம் பேசியிருக்கிறார்.
தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, புதிய அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.
முதலீடுகள் முக்கியம்
ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல; உறுப்பினர் பேசும்போது சொன்னார்; ‘புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே, அடுத்த நிமிடமே, அடுத்த மாதமே தொழிற்சாலை வந்துவிடும்; வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் அவையெல்லாம் வரும்’ என்ற அடிப்படையில் தனது கருத்துகளை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.
அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன; புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.
தொழில் துறைக்கு பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவும், அவருக்கு துணையாக நின்று பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துகளை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்த தொழில் துறை குழு, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
‘தினத்தந்தி’ தலையங்கம்
இன்றைக்குக்கூட பிரபலமான தமிழ் பத்திரிகையான ‘தினத்தந்தி' பத்திரிகையின் தலையங்கத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இன்றைக்கு குறிப்பிட்டிருக்கிறார்கள்; “தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்” என்று இந்த அரசை பாராட்டி, அந்த பத்திரிகை தலையங்கமே எழுதியிருக்கிறது.
ஏற்கனவே, ஆங்கில நாளேடான இந்து பத்திரிகை, ‘அன்னிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு’ என்று பாராட்டி எழுதியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதல்-அமைச்சர் தலைமையில் 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சியை நிறைவேற்றுவோம்” என்றார்.