ஆபரேசனின் போது இரும்பு துண்டை அகற்றாததால் பாதிப்பு: சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
ஆபரேசனின் போது இரும்பு துண்டை அகற்றாததால் பாதிப்பு: சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
சென்னை,
சென்னை குரோம்பேட்டை ரெங்காநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுதா. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2018-ம் ஆண்டு நடந்த எனது மகள் கவிநயா மீது கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு ‘ஆபரேசன்’ செய்யப்பட்டது. இதன்பின்பு வீடு திரும்பிய எனது மகளுக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, ‘எக்ஸ்ரே' எடுத்து பார்த்தபோது எனது மகளின் அடிவயிற்றில் சிறிய இரும்பு துண்டு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதன்பின்பு ஆபரேசன் மூலம் அந்த இரும்பு துண்டு அகற்றப்பட்டது. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவனக்குறைவால் எனது குழந்தை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் வகுத்துள்ள மருத்துவ நெறிமுறைகள்படி, முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, சிறுமி கவிநயா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். எனவே, தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.