பக்கிங்காம் கால்வாயை பராமரிப்பதில் பொதுமக்களுக்கு பங்கு உண்டு ஐகோர்ட்டு கருத்து
பக்கிங்காம் கால்வாயை பராமரிப்பதில் பொதுமக்களுக்கு பங்கு உண்டு ஐகோர்ட்டு கருத்து.
சென்னை,
ஆந்திராவில் இருந்து புதுச்சேரி மாநிலம் வரையிலான பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 2014-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கப்ப வக்கீல் ரகுநாதன், ‘கால்வாய்க்கு உள்ளேயும், கரையோரத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை வகுக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சேதமடைந்துள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, கால்வாயை பழையநிலைக்கு கொண்டுவர வேண்டும். பக்கிங்காம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரமும் அழகாகும். இந்த கால்வாயை பராமரிப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளை இன்று (புதன்கிழமை) விசாரிக்க உள்ளோம். அந்த வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்படும்’ என்று அறிவித்தனர்.