உள்ளாட்சி துறை அலுவலகம் முன் புதுவை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி துறை அலுவலகம் முன் புதுவை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி
சென்னை ஐகோர்ட்டு ஆணையை நிறைவேற்றாத புதுவை அரசை கண்டித்து சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் உள்ளாட்சி துறை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் ஆலடி கணேசன், சிந்தனையாளர் இயக்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும், நகரின் அழகை கெடுக்கும் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும். பேனர்கள் வைப்பதற்கு அதிகாரிகள் துணை போக கூடாது என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.