பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை பணி சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்

இடையார்பாளையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்

Update: 2022-04-19 14:36 GMT
அரியாங்குப்பம்
புதுச்சேரியில் தினமும் 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுகளை அகற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. நீர்நிலைகள், கடலில் சென்று சேரும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து மணவெளி தொகுதிக்குட்பட்ட இடையார்பாளையம் பகுதியில் 200 மீட்டர் தொலைவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அறிவியல் அதிகாரிகள் செல்வநாயகி சாந்தலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணவாளன், உள்ளாட்சித்துறை செயற்பொறியாளர்கள் லட்சுமணன், திருநாவுக்கரசு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், புதுச்சேரி பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, பா.ஜ.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்