மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாய்..!
அம்பத்தூரில் மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்ததில் தாய்-மகன் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை:
சென்னை அம்பத்தூர், பள்ளி சாலையை சேர்ந்தவர் லதா (38). இவரது கணவர் பரத்வாஜ். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் தவஜ் (14) என்ற ஒரு மகன் உள்ளாம். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் இன்று காலை லேசாக மயங்கிய நிலையில் இருந்த தவஜ் எதிரே வசிக்கும் நவநீதம் என்பவரை அழைத்து உள்ளார். கதவைத் திறந்து உள்ளே வந்த நவநீதம் லதா இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மயங்கிய நிலையில் இருந்த தவஜை உறவினர்கள் உதவியுடன் அம்பத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பொருளாதார வசதி இன்றி இருந்து வந்த லதா தற்கொலை முடிவெடுத்து தனது மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தது தெரியவந்தது.