ஐகோர்ட்டு நீதிபதி கார் விபத்தில் சிக்கியது; பெண் நீதிபதி காயம்
அண்ணா சதுக்கம் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதிய விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காயமடைந்தார்.
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா. இவர் இன்று காலை 10மணி அளவில் காரில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கங்கா பவானி அம்மன் கோவில் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இதில் நீதிபதி மாலாவுக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.
அதன் பின் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.