இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ. தங்கராஜ் ஆகியோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2022-04-19 06:50 GMT
சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 9-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன், சேகர் ராமச்சந்திரன், சுஜாதா ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஐ.ஜே.கே.தலைவர் பாரிவேந்தர் எம்.பி., மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

தி.மு.க. சார்பில் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தென்சென்னை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் விஜயராஜ், துணை அமைப்பாளர் மகேந்திரன், வட்ட செயலாளர்கள் எம்.கே.கமலக்கண்ணன், சுரேஷ், வினோத்குமார், கே.முத்துராமன், அடையாறு பூவை சரவணன், வெண்ணிலா குமார்.

அ.தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், தென்சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் போயஸ்கார்டன் ஆனந்த், அண்ணாநகர் தேவராஜ், அ.தி.மு.க. சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை

தமிழக காங்கிரஸ் சார்பில் தி.நகர் ஸ்ரீராம், எம்.எஸ்.காமராஜ், முன்னாள் கவுன்சிலர் வில்லியம்ஸ், தணிகாசலம், ஹேம்நாத், செந்தில்குமார், டி.ஆர்.பாண்டியன், வி.எல்.சி. ரவி,

பா.ஜனதா சார்பில் எம்.என்.ராஜா, கராத்தே தியாகராஜன், காளிதாஸ், பிரேம்ஆனந்த், வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் வன்னியராஜ், ராமையன், ஓம் ஸ்ரீசேகர்,

பா.ம.க. சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜமுனா கேசவன், ஸ்ரீராம் அய்யர், பகுதி தலைவர் முரளி,

ம.தி.மு.க. சார்பில் சைதை சுப்பிரமணியன், வைகோ மைக்கேல், செல்லப்பாண்டியன்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், செய்தித் தொடர்பாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் வைகுண்டராஜா, உதயகுமார், பாலமுருகன், சுப்பிரமணியன், ராஜ் நாடார், பேச்சிராஜன், செல்வராஜ், ராபர்ட், வி.பி.ஐயர், சுந்தர்லிங்கம், மடிப்பாக்கம் ரவி, விருகை மணிராஜ், தி.நகர் பாலமுருகன், முருகேச பாண்டியன், தர்மராஜ், வியாசை கனகராஜ், புரசை நாகராஜ்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்ணன், தங்கமுத்து, சீனிவாசன், ராஜேஷ், தாஸ், சங்கரபாண்டியன், பாக்யராஜ், சண்முகசுந்தரம்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், நிர்வாகிகள் புகழேந்தி, பிரபு, முகமது ஆரூண், விஜயகுமார், ராமகிருஷ்ணன், ராஜ்குமார், ஸ்ரீதர், ரவிக்குமார், அஜீஸ், செந்தில், ஆனந்தன், மணிகண்டன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, செல்வம், வட்டச் செயலாளர்கள் பகவான்தாஸ், சந்திரசேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்