"11 மாதங்களில் 141 சாமி சிலைகள் மீட்பு"... சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிர்ச்சி தகவல்

கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் கைப்பற்றப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-04-19 05:07 GMT
கோப்புப்படம்
சென்னை,

சிலைகடத்தை தொடர்பான வழக்குகளில் கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் கைப்பற்றப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 மே முதல் 2021 ஏப்ரல் வரை 7 வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 80 சிலைகள் மீட்கப்பட்டதுடன், 9 பேர் கைதுசெய்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு மே மாதம் முதல் நேற்று வரையிலான தேதி வரை 33 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 141 சிலைகள் மீட்கப்பட்டதுடன், 44 பேர் கைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட சிலைகளில். 500 கேடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை, 4 அடி உயர 5 கோடி மதிப்புள்ள சம்ஹாரமூர்த்தி சிலை, 10 தலை கொண்ட ராவணன் உலோக சிலை, 4 அடி உயரமுள்ள சிவன் சிலை உள்ளிட்டவை அடங்கும். 

சிறப்பாக பணிபுரிந்து சிலைகளை கண்டுபிடித்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்