கத்தியை காட்டி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 70 ஆண்டு சிறை

கத்தியை காட்டி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 70 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு.

Update: 2022-04-18 20:09 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை போடிப்பட்டியை சேர்ந்தவர் நவரசன் (வயது 27). மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12-9-2020 அன்று தனது மனைவி அழைப்பதாக கூறி ஏமாற்றி 12 வயது மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடம் நவரசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் செல்போனில் படம் எடுத்தும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியும் மாணவியை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவி மிகவும் சோகமாகவும், சரியாக உறக்கம் இல்லாமலும் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் விசாரித்தபோது, நவரசன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவரசனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி 5 பிரிவின் கீழ் நவரசனுக்கு 70 ஆண்டு சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்