மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றம்
தவளக்குப்பம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மாரியம்மன், கெங்கையம்மன், பூரணி புஷ்பகலா சமேத மஞ்சினீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இங்கு மகோற்சவ விழாவையொட்டி இன்று காலை புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து பகல் 12 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் மஞ்சினீஸ்வரர் பொற்கலை பூரணி சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து விழா நடைபெறுகிறது.