15 ஆண்டுகளுக்கு பின் காட்டுக்குப்பம் ஏரி தூர்வாரப்படுகிறது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக 15 ஆண்டுகளுக்கு பிற்கு காட்டுக்குப்பம் ஏரி தூர்வாரப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தில் சுமார் 7 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ள ஏரி சுமார் 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி விடுப்பட்டது. இதனால் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்றி, தூர்வார வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இதனை பார்த்த ஸ்வர்ணம் புதுச்சேரி ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டியினர் காட்டுக்குப்பம் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை முதற்கட்டமாக அப்புறப்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுத்தனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஸ்வர்ணம் புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி அறிவியல் தொழில்நுட்ப துறையின் தண்ணீர் ஆராய்ச்சி பிரிவு துணை ஆராய்ச்சியாளர் வினோத்குமார், ஜாய் கங்குலி, டாக்டர் செந்தில்குமார், பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீர்நிலை ஆர்வலர் எழில்வேந்தன் செய்திருந்தார்.