மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடக்கம் - அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

Update: 2022-04-18 07:47 GMT
கோப்பு படம்
சென்னை,

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது:-

அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இந்த அணை பாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடக்கம். அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவை கூட  அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன.

அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் அணை பாதுகாப்பு சட்டம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழ்நாடு அரசு தான், ஆனால் இருக்கு இடம் என்னவோ கேரளா. தமிழ்நாடு- கேரளா இணைந்து சூப்பர்வைசர் குழு அமைக்க உள்ளது. சட்ட வல்லூநர்களுடன் ஆராய்ந்த பின், வேறு வழியில்லாமல் இதில் சேர்ந்துள்ளோம். இது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்