தமிழக கவர்னரின் செயல்பாடு - முன்னாள் கவர்னர் திடீர் கருத்து

தமிழக கவர்னரின் செயல்பாடு குறித்து கேரளாவின் முன்னாள் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-17 13:50 GMT
சேலம்,

தமிழக முதலமைச்சரும், ஆளுநரும் அவரவர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட்டு வருவதாக கேரளாவின் முன்னாள் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். 

சேலம் கொண்டலாம்பட்டியில் தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில மாநாட்டில், கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பான விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்போம் என்றார்.

மேலும் செய்திகள்