சித்திரை முழுநிலவையொட்டி கண்ணகி கோவிலில் முப்பெரும் விழா

தேனி மாவட்டத்தில் சித்திரை முழுநிலவையொட்டி கண்ணகி கோவிலில் முப்பெரும் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-16 19:40 GMT
தேனி,

தேனி மாவட்டம் மங்கலதேவி மலையில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சித்திரை மாத முழுநிலவு விழாவையொட்டி இந்த கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 

பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதிக்குள் இந்த கோவில் இருப்பதால், பக்தர்களுக்கு தமிழக, கேரள அரசுகள் சார்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்