கரூரில் ரோப் கார் சோதனை ஓட்டம் - எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
குளித்தலையில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர் மலையில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார். இந்த ரோப் கார் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.