லாட்டரி விற்ற 4 பேர் கைது
லாஸ்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை மூகாம்பிகை நகர் முருகன் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டசி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்ற நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், நாவற்குளத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 49), ஈஸ்வர் (20), குறிஞ்சி நகரை சேர்ந்த மதிவாணன் (34), அரிபிரசாத் (27) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம், செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.