திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-04-16 13:21 GMT
தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சனீஸ்வரர் கோவில்
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்று இரவு முதல், திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 
பக்தர்கள் குவிந்தனர்
தொடர்ந்து, இன்று அதிகாலை முதலே புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர். இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
சனீஸ்வரர் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர். 
வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் கூடியதால், திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்