லாரியிலிருந்து காருக்கு ஏற்றியபோது சிக்கிய 150 கிலோ குட்கா - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

திருவள்ளூர் அருகே குட்கா கடத்தி வந்த வாகனத்தை சோதனை செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-16 09:16 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் சத்திரம் பகுதியில் கன்டெய்னர் லாரியில் இருந்த பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒன்றரை லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா பொருட்களை கடத்தி வந்து, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக காரின் முன்பக்கம், பின்பக்கத்தில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதும் தெரியவந்தது. 

இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்து, போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், கன்டெய்னர் லாரி, காரையும் பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்