’குளிர்பானங்கள் உடலுக்கு கேடு’ - திருவண்ணாமலையில் மோர் விற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்...!
திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெளிநாட்டு பெண் மோர் விற்பனை செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் தமிழர்களின் பாரம்பரிய இயற்கை பானமான மோர் விற்பனை செய்தார்.
உடலுக்கு நன்மையும், வெயிலுக்கு குளிர்ச்சியும் தரும் மோரை பக்தர்கள் அருந்த வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மோர் விற்பனை செய்வதாக தெரிவித்து உள்ளார். அவருக்க கணவன் மற்றும் அவரது உறவினர்கள் உதவி செய்தனர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
திருவண்ணாமலையின் இயற்கை அழகை ரசிக்க வந்துள்ள நான் தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி அறிந்துகொண்டேன்.
தமிழகத்தில் இயற்கை பானமாக மோர் கருதப்படுகிறது. அதனை குடிப்பதைத் தவிர்த்து இன்றைய பொதுமக்கள் குளிர் பானங்களை குடித்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.
எனவே இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்து வருகிறேன். குறைந்த விலையில் கிடைக்கும் மோர் உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் அளிக்கும் சக்தி கொண்டது. எனவே மக்கள் மோரை புறக்கணிக்காமல் அதனை கோடைக்காலங்களில் அருந்தி பயனடைய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.