வீணாகும் மோட்டார் சைக்கிள்கள்

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் வீணாகுகின்றன.

Update: 2022-04-15 17:07 GMT
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழை, வெயிலில் இந்த மோட்டார் சைக்கிள்கள் நின்று மண்ணோடு மண்ணாக மக்கி வருகிறது. பல வருடங்களாக ஒரே இடத்தில் நிற்பதால் பாம்பு, விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இது போலீசாருக்கும், போலீஸ் நிலையம் வரும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே பல ஆண்டுளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விட்டு அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்