நரிக்குறவர் இன மக்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆவடியில் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-04-15 04:42 GMT
சென்னை,

கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். 

அதனை நிறைவேற்றும் வகையில் ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், உயர்மின் கோபுரம், சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும் அந்த பகுதி மக்களுக்கு முதியோர் உதவித் தொகை, முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்