மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2,036 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்,
கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதம் முதலே அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்றைய தினம் 1,735 கன அடியாக இருந்த நிலையில், இன்று 2,036 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.76 அடியாக உள்ளது. அணையில் தற்போது 71.14 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும் குடிநீர் தேவைகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.