கவர்னர் விருந்து: தமிழக அரசு புறக்கணித்தது சரியான முடிவு - கி.வீரமணி கருத்து
கவர்னர் விருந்து: தமிழக அரசு புறக்கணித்தது சரியான முடிவு - கி.வீரமணி கருத்து.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘நீட்’ தேர்வில் இருந்துவிலக்கு கோரும் மசோதா 2-வது முறையாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து வேண்டுகோள் வைத்தபோது, அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க காலவரையறை எதுவும் கூறமுடியாது என்று கவர்னர் கூறியிருக்கிறார்.
இது தமிழக சட்டமன்ற மாண்பையும், ஜனநாயகக் கோட்பாட்டையும், வாக்களித்து ஆட்சியை அமைத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குப் போட்டி அரசு நடத்திடகவர்னர் தயாராகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
இந்தநிலையில், கவர்னர் விடுத்த விருந்து வேண்டுகோளைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்தது மிகவும் சரியான முடிவாகும். அரசியலமைப்பு சட்டத்தின் ஜனநாயக உரிமையை காக்கும் செயலாகவே இதனை கருதவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.