பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

குயிலாப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி 501 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Update: 2022-04-14 17:43 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி 501 பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி அய்யனாரப்பன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். உலக நன்மைக்காகவும், ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர கோரியும், இந்த பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்