அம்பேத்கர் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்கள்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழிசை-ரங்கசாமி மாலை
புதுவை அரசு சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தி.மு.க.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமாரவேல், அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், ஜே.வி.எஸ்.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலவன், அருள்செல்வி, பிரபாகரன், பொறுப்பாளர்கள் கோபால், முகிலன், வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வில்லியனூர் தாசில்தார் அலுவலகம், வில்லியனூர் பெரியபேட் ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சிவா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பா.ஜ.க., காங்கிரஸ்
பா.ஜ.க.வினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, வெங்கடேசன், வி.பி.ராமலிஙகம், பொதுச்செயலாளர் மோகன்குமார், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், நிர்வாகிகள் எஸ்.எம்.ஏ. கருணாநிதி, சூசைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கட்சி அலுவலகத்திலும் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க.
கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் கணேசன், அன்பானந்தம், துணைத்தலைவர் ராஜாராமன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் அன்பழக உடையார், காந்தி, குமுதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், நகர செயலாளர் ஜெயசிங்குராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத்தலைவர் ராமதாஸ், நிர்வாகிகள் காசிநாதன், சுத்துக்கேணி பாஸ்கரன், செல்வராஜ், ஆனந்தன், கோவிந்தம்மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், சங்கர் உடையார், சிவாலயா இளங்கோ, பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் சேதுசெல்வம், கீதநாதன், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ம.க.,
பா.ம.க. சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர்கள் முருகன், நாகப்பன், பொருளாளர் நரசிம்மன், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் நேரு எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், பீம்சேனா இயக்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி ஆகியோரது தலைமையில் தனித்தனியாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு சமூக அமைப்பினர், மாணவர் அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பாகூர்
பாகூரில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் முன்னாள் கவுன்சிலர் ருத்ரமூர்த்தி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி தவமணி, தனலட்சுமி, முன்னாள் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் குமாரசாமி வைரமுடி, முன்னாள் மாவட்ட தலைவர் பழனிவேல், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருமாம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு துணை சபாநாயகர் ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.