புதுவையை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சேதராப்பட்டு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சிலர் அந்த பகுதியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரிடம் சோதனை நடத்தியபோது 350 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்ற சூரியா (வயது 21) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா, மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.