ஆஞ்சநேயர் கோவில்களில் லட்ச தீபவிழா

திருக்கனூர் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில்களில் லட்ச தீப விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Update: 2022-04-14 16:46 GMT
திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பட்டு கொண்டதாச பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ விமல ஆஞ்சநேயர் கோவிலில் 21-ம் ஆண்டு லட்சதீப விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து லட்ச தீப விழாவும், குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதேபோல் வாதானூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த லட்சதீப விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 
திருக்கனூரை அடுத்த கைக்கிளப்பட்டு கிராமத்திலும் ஆஞ்சநேயர் கோவிலிலும் லட்ச தீப விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்