'பீஸ்ட்' டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!
'பீஸ்ட்' படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர், சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள திரையரங்கின் முன் நின்று பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனை செய்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவரிடம் விசாரனை செய்ததில், அவர், விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகி என்பதும், ரசிகர்களுக்காக வாங்கப்பட்ட 180 டிக்கெட்டில் 46 டிக்கெட்டுகளை மட்டும் ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டு, மீதி உள்ள டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைதுசெய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தாதாக கூறப்படுகிறது.