திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தங்க ரதத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்...!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க ரதத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவண்ணாமலை,
சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனால் காலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி -அம்மாள் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பின்னர் பிரகாரத்தில் உலா வந்த தங்க ரதத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.