நெல்லை: பெண் கொடுக்க மறுத்த அண்ணனுக்கு அரிவாள் வெட்டு...!

நெல்லை அருகே பெண் கொடுக்க மறுத்த அண்ணனை வாலிபர் அரிவாளால் வெட்டு உள்ளார்.

Update: 2022-04-14 04:00 GMT
களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் அகஸ்டின் ஜானி மோசஸ் (வயது 35). இவர் களக்காட்டில் பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இவரது சித்தப்பா மகளை மஞ்சுவிளையை சேர்ந்த விஜய் ரூபன் திருமணம் செய்ய பெண் கேட்டார். அதற்கு பெண் வீட்டார் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய்ரூபன் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பெண்ணின் தந்தையை தாக்கினார் உள்ளார். 

இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர், போலீசார் விஜய் ரூபன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விஜய் ரூபன் தற்போது முன் ஜாமீனில் வெளி வந்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று அகஸ்டின் ஜானி மோசஸ் மேலப்பத்தையில் இருந்து, களக்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அவர் தாமரைகுளம் நடுமடை அருகே வந்த போது, விஜய்ரூபன் அவரை வழிமறித்து உனது தங்கையை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கூறி உள்ளார்.

அதற்கு அகஸ்டின் ஜானி மோசஸ் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விஜய் ரூபன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அகஸ்டின் ஜானி மோசசை வெட்டி உள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த மோசஸ் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து  அவர் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜய் ரூபனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்