13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தனது கள்ளக்காதலியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார்.
தேனி,
தேனி மாவட்டம் புத்தம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 33) என்பவர் தேனி பகுதியை சேர்ந்த தனது கள்ளக்காதலியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துப்பாண்டியையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துப்பாண்டியின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள முத்துப்பாண்டியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறை காவலில் வைத்தனர்.