பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள்
பெரிய மார்க்கெட் பகுதியை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம் புதுவை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள், பெரிய மார்க்கெட் பகுதியை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம் புதுவை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகரன், மருத்துவ அதிகாரி துளசிராமன், மார்க்கெட் கண்ட்ரோலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பெரிய மார்க்கெட்டில் புதிய கழிப்பிடங்கள் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டமைப்புகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.