விஜய் பேனருக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

Update: 2022-04-13 17:22 GMT
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை காண அதிகாலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூடினார்கள். இந்த படத்தை வரவேற்று புதுவை நகரம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கட்-அவுட், பேனர்கள் வைத்திருந்தனர். காலையில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
திருக்கனூர் பகுதியில் விஜயின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகள்