நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-13 11:36 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில், நூல் விலையேற்றம் குறித்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி, நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நூல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வராததால், தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

இதற்கு பதிலளித்த கைத்தறி அமைச்சர் காந்தி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிகை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நூல் விலையேற்றம் காரணமாக தமிழ்நாட்டின் தொழில்துறையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் அக்கறை காட்டி வருவதாகவும் கூறினார்.

மேலும் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்