தொடர் விடுமுறை - தமிழகத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக உள்ளது.
இந்நிலையில், வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை என்பதால் வரும் 16 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வரும்16 ஆம் தேதியும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் (அதாவது) நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை, சேலம், நாகை, வேளாங்கண்ணி, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரகங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதைபோல பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல்17-ம் தேதி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.