மத்திய பல்கலை. பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது
தனி தீர்மானம்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதன்படி நேற்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிரான தனிதீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நுழைவுத்தேர்வு
மாநிலத்தின் கல்வி உரிமை மீது மத்திய அரசின் தாக்குதல் தொடருகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு “பொது நுழைவுத்தேர்வு” என்று அறிவித்து, வருகின்ற 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என பீடிகை போட்டு, ஓர் அறிவிப்பை மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதனை எதிர்த்து இந்த மாமன்றத்தில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தேசிய தேர்வு முகமை
மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு, 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் அம்மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மாணவர்களை பாதிக்கும்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட எந்தவொரு நுழைவுத்தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்காது என்று இந்த பேரவை கருதுகிறது. பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில்80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவினரை சேர்ந்தவர்களாவர்.
எனவே, அந்த பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்த சூழ்நிலை நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்பு கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் என்றும் இந்த பேரவை கருதுகிறது.
ரத்து செய்ய வேண்டும்
இந்த நுழைவுத்தேர்வும், ‘நீட்’ தேர்வை போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்டகால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நுழைவுத்தேர்வை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
எனவே, மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. வரவேற்பு: பா.ஜ.க வெளிநடப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை அன்பழகன் (அ.தி.மு.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தைகள்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி). ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
தீர்மானத்துக்கு ஆதரவு
இதைத்தொடர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தனி தீர்மானத்தின் மீது பா.ஜ.க.வை தவிர்த்து, இந்த அவையிலே இருக்கக்கூடிய மற்ற எல்லா கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் வரவேற்று பேசி, இந்த தீர்மானத்திற்கு ஒரு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நிறைவேறியது
இந்த தீர்மானம் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வினை பிரதிபலிப்பதாக இருப்பதால், இந்த பொது நுழைவுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பிலே மத்திய அரசை இந்த மன்றத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்காத வகையிலே, மத்திய அரசு பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.