மது குடித்த வாலிபர் சாவு

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வாலிபர் சாவு

Update: 2022-04-10 18:11 GMT
லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த அம்பிகா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட விஜயகுமார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவர் திடீரெய சுயநினைவு இன்றி மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்