கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தேடிச் சென்று தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-04-10 16:36 GMT
மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் டெலடாக் டெலிமெடிசின் தொலை மருத்துவத்துறையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 10 கோடியே 54 இலட்சத்து 77 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது, தமிழகத்தில் 92.03 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77.19 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை,

கொரோனா தொற்று குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே தயக்கமும், சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசியை தாமதன்றி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்