பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கணவர்
பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
கோவை வேடப்பட்டியை சேர்ந்த 32 வயது பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனக்கும், எனது கணவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதன்காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் எனது கணவர், எனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டுகிறார்.
மேலும் பென் டிரைவ் ஒன்றில் எனது புகைப்படங்களை வைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.