பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி... போக்சோவில் கைது

திருச்செங்கோடு அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-10 08:58 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே கீழேரிபட்டி ஜீவா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், விசைத்தறி தொழிலாளி. இவருடைய மகன் நந்திஷ் (வயது 23), கட்டுமான தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது மாணவியை கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி 5 மாதம் கர்ப்பம் அடைந்தார். 

இதில் உடல்நிலை பாதிப்படைந்த மாணவி தனக்கு நேர்ந்ததை உறவினர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் நந்திஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேநேரத்தில் மாணவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்