ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தற்கொலை

ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.;

Update: 2022-04-09 17:43 GMT
புதுவை ரெயில்நிலைய வளாகத்தில் உள்ள உள்ள புளிய மரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதுகுறித்து ரெயில் நிலைய கண்காணிப்பாளர் சேகர் ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டும், நீல நிற கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். ஆனார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார்   வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்