கும்பகோணம் அருகே அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி..!
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தஞ்சாவூர்:
சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து கும்பகோணம் அருகே மானம்பாடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சைக்கிளில் மெயின் ரோட்டின் குறுக்கே கடக்க முயன்றுள்ளார்.
இதில் அவர் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக அரசு பேருந்தை திரும்பியபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாய்பாடி சேர்ந்த சக்திவேல், செல்வம் என்பவர்கள் மீது மோதி நிலைதடுமாறி அருகில் உள்ள குளத்தில் இறங்கியது.
அப்போது அரசு பேருந்து மோதியதில் செல்வம் (55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் படுகாயமடைந்த சக்திவேல் (45) கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தகவலறிந்த சோழபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.