தென்காசி: கொளுத்தும் வெயிலிலும் குற்றாலம் அருவியில் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...!
தென்காசி குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி,
தென்காசி குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்தநிலையில் இடையிடையே சங்கரன்கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது.
இதேபோன்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்த காரணத்தால் வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளில் இன்று காலை முதல் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஓரளவிற்கு தண்ணீர் நன்றாக விழுகிறது.
இதே போன்ற ஐந்து கருவிகளும் குறைவாக தண்ணீர் விழுகிறது. இதை அறிந்ததும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.
இன்னும் மழை தொடர்ந்து நீடித்தால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொளுத்தும் வெயிலில் குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.