பெரிய மார்க்கெட்டில் மீன் மொத்த விற்பனை செய்ய அனுமதி மறுப்பு
பெரிய மார்க்கெட்டில் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டத்தில் பாதியில் மீனவர்கள் வெளியேறினர்.
பெரிய மார்க்கெட்டில் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டத்தில் பாதியில் மீனவர்கள் வெளியேறினர்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரிய மார்க்கெட் மொத்த மீன் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமை தாங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கார்த்திகேயன், கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் வம்பாக்கீரப்பாளையம், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம் ஆகிய மீனவ பஞ்சாயத்து தலைவர்கள், மொத்த மீன் வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அரசு உத்தரவுபடி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மீன் மொத்த வியாபாரம் செய்யும் மொத்த மீன் வியாபாரிகளை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கபட்டது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை போலீசார் ஏற்கவில்லை.
அனுமதி மறுப்பு
திங்கட்கிழமை முதல் மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு மீனவ பஞ்சாயத்து தலைவர்கள், மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.