மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-08 17:05 GMT
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காக்காயந்தோப்பு மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வீராம்பட்டினம் கிழக்கு தேரோடும் வீதியை சேர்ந்த போற்றிவளவன் என்ற ஸ்ரீராம் (வயது 21), வீராம்பட்டினம் வடக்கு மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேந்தர் (24) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 216 கிராம் அடங்கிய 24 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள மைதானம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக கருவடிக்குப்பம் மெயின்ரோடு மகாவீர் நகரை சேர்ந்த தினேஷ் என்ற வீரப்பன் (28) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்